என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கிக்கி சேலஞ்ச்
நீங்கள் தேடியது "கிக்கி சேலஞ்ச்"
ரெயிலில் இருந்து இறங்கி கிக்கி சேலஞ்ச் நடனம் ஆடி கைதான 3 பேரை ரெயில் நிலையத்தை சுத்தம் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Kikidancechallenge #PoliceissueKikiadvisories
மும்பை :
கனடாவை சேர்ந்த பிரபல ‘ராப்’ இசை பாடகர் டிரேக் என்பவர் சமீபத்தில் ‘கிக்கி சேலஞ்ச்’ என்ற பெயரில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓடும் காரில் இருந்து திடீரென சாலையில் கீழே குதித்து தனது மிகப்பிரபலமான ‘இன் மை பீலிங்ஸ்’ என்னும் பாடலுக்கு நடனமாடும் அந்த காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவி வருகிறது.
‘கிக்கி சேலஞ்ச்’ என்று அழைக்கப்படும் இதைகண்டு உலகம் முழுவதும் பலர் இதுபோல் ஓடும் வாகனங்களில் இருந்து திடீரென கீழே குதித்து நடுச்சாலையில் நடனடமாடும் வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
ஒரு வீடியோவில் சாலையில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கைப்பை பறிபோவதும், இன்னொருவர் ஆடும்போது கார் மோதி தூக்கி எறியப்படும் அசம்பாவித காட்சிகளும் பரவி வருகிறது.
இந்த ’கோரக்கூத்தை’ பார்த்து இந்தியாவிலும் சிலர் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் டெல்லி, மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம், சண்டிகர் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த 3 பேர் அம்மாநிலத்தின் வசாய் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து இறங்கி பாடலுக்கு கிக்கி சேலஞ்ச் நடனம் ஆடியவாறு வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் பார்க்கும் அளவிற்கு வைரலாகியது.
இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு வசாய் ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் விதத்தில் அவர்கள் 3 பேரும் காலை 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் வசாய் ரெயில் நிலையத்தை 3 நாட்களுக்கு சுத்தம் செய்யம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். #Kikidancechallenge #PoliceissueKikiadvisories
ஓடும் வாகனங்களில் இருந்து குதித்து சாலையில் நடனம் ஆடும் ‘கிக்கி சேலஞ்ச்’ வீடியோ வைரலாக பரவிவரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #KikiChallenge
புதுடெல்லி:
கனடாவை சேர்ந்த பிரபல ‘ராப்’ இசை பாடகர் டிரேக் என்பவர் சமீபத்தில் ‘கிக்கி சேலஞ்ச்’ என்ற பெயரில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓடும் காரில் இருந்து திடீரென சாலையில் கீழே குதித்து தனது மிகப்பிரபலமான ‘இன் மை பீலிங்ஸ்’ என்னும் பாடலுக்கு நடனமாடும் அந்த காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவி வருகிறது.
‘கிக்கி சேலஞ்ச்’ என்று அழைக்கப்படும் இதைகண்டு உலகம் முழுவதும் பலர் இதுபோல் ஓடும் வாகனங்களில் இருந்து திடீரென கீழே குதித்து நடுச்சாலையில் நடனடமாடும் வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவர்களின் நண்பர்கள் மூலம் அந்த காட்சிகள் விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.
ஒரு வீடியோவில் சாலையில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கைப்பை பறிபோவதும், இன்னொருவர் ஆடும்போது கார் மோதி தூக்கி எறியப்படும் அசம்பாவித காட்சிகளும் பரவி வருகிறது. இந்த சவாலை ஏற்று நடிகை ரெஜினா நடனம் ஆடிய வீடியோவும் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இந்த ’கோரக்கூத்தை’ பார்த்து இந்தியாவிலும் சிலர் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் டெல்லி, மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம், சண்டிகர் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, டெல்லியில் ஆம்புலன்ஸ் கதவு திறந்திருக்க ஓடும் அந்த வாகனத்தின் பக்கவாட்டில் ஒருவர் நடனமாடும் காட்சியை வெளியிட்டுள்ள டெல்லி போலீசார், ‘சாலையில் நடனமாடுவது உங்களுக்கான புதிய (மரணத்தின்) கதவுகளை திறந்துவிடும் "Dancing on the roads can open new doors for you." என பதிவிட்டுள்ளனர்.
அன்புள்ள பெற்றோரே.. உங்கள் குழந்தைகளின் வாழ்வில் எல்லா சேலஞ்களிலும் நீங்கள் துணையாக இருங்கள். ஆனால், கிக்கி சேலஞ்சில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள் என உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல் மும்பை, சண்டிகர் மற்றும் பெங்களூரு நகர காவல் துறையினரும் எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டுள்ளனர். #Kikidancechallenge #PoliceissueKikiadvisories
தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் கிக்கி சேலஞ்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #KiKiChallange #ReginaCassandra
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமைதியான பெண்ணாக நடித்தவர் ரெஜினா. அதனைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு சமீபத்தில் கவுதம் கார்த்திக்கு அவர் ஜோடியாக நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படம் ரிலீசானது. இப்படத்தில் பிகினி உடையில் அவர் கலக்கியிருந்தார். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரெஜினா.
அதில் ஓடும் காரில் இருந்து இறங்கி ஒரு பாப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சிறிது நேரம் ஓடும் காருக்கு இணையாக சாலையில் நடனம் ஆடும் அவர், பின்னர் அதே வேகத்தில் ஓடும் காரில் ஏறிக் கொள்கிறார். இந்த வீடியோ படப்பிடிப்பின் இடைவேளையில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பாவாடை தாவணி கட்டி, கிராமத்துப் பெண் போன்ற தோற்றத்தில் ரெஜினா தோற்றமளிக்கிறார்.
கூடவே இந்தப் பதிவில் அவர், ‘கிக்கி சாலஞ்ச் முடித்து விட்டேன். உங்களுடைய டியூனுக்கு தென்னிந்தியப் பெண்களாலும் டான்ஸ் ஆட முடியும்‘ என தெரிவித்துள்ளார். பிரபல ஆலிவுட் பாப் பாடகர் டிரேக்சின் ஸ்கார்பியன் எனும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ‘இன் மை பீலிங்ஸ்’.
கடந்த மாதம் இந்த ஆல்பம் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதுபோல டான்ஸ் ஆடும் சவால் ‘இன் மை பீலிங்ஸ்’ சவால் அல்லது கிக்கி சவால் என்ற பெயரில் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. #KiKiChallange #ReginaCassandra
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X